செய்திகள்

ஆஷஸ் உணவு இடைவேளை: வலுவான நிலையில் ஆஸி.! 

5வது ஆஷஸ் டெஸ்டின் கடைசி நாளான இன்று ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. 

DIN

கடைசி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆஸி. அணி 295 ரன்களுக்கு ஆட்டமிழக்க இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டினை விளையாடி 395 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸி. அணிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 2-1 என ஆஸி. அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஆஸி. அணி உணவு இடைவேளை வரை விளையாடி 238/3 ரன்கள் எடுத்துள்ளது.  நிதானமான தொடக்கத்தை தந்த வார்னர் 60 ரன்களுக்கும் கவாஜா 72 ரன்களுக்கும் கிறிஸ்  ஓக்ஸ் பௌலிங்கில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லபுஷேன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித் - டிராவிஸ் ஹெட் அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். 

ஸ்மித் 40 ரன்களும் ஹெட் 31 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்னும் 146 ரன்கள் எடுத்தால் ஆஸி. அணி வெற்று பெரும். வலுவான நிலையில் இருப்பதால் 3-1 என இந்த ஆஷஸ் தொடரை ஆஸி. அணி வெல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT