கோப்புப் படம் 
செய்திகள்

மீண்டும் டெஸ்ட் அணியில் மொயின் அலி? 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயின் அலியை மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஆஷஸ் தொடரிலிருந்து ஜேக் லீச் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இசிபி (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) மொயின் அலியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். இந்தாண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. 

மொயின் அலி 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2914 ரன்களும், 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். கடைசியாக செப்.2022இல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்தார். 

ஐபிஎல் போட்டிகளிலும் மொயின் அலி சிறப்பாகவே விளையாடினார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலி திரும்பினால் பென் ஸ்டோக்ஸ்- மெக்குல்லம் எதிர்பார்க்கும் பேஸ் பால் கிரிக்கெட்டுக்கும் பொருத்தமாக இருப்பாரென பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

மறுவெளியீடாகும் நாயகன்!

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

ஓடிடியில் வெளியானது மதராஸி!

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT