ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை பெற்றது.
இதையும் படிக்க: ஒருநாள் உலகக் கோப்பை: மற்றுமொரு நியூசிலாந்து வீரர் விலகல்!
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நன்றாக விளையாடியதால் ஸ்மித், ஹெட் தரவரிசையில் முன்னேறியுள்ளார்கள். மார்னஸ் லபுஷேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
ஒரே அணியை சேர்ந்த மூன்று பேர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதற்குமுன் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கோர்டன் கிரீனிக், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் 1984 டிசம்பரில் முதல் மூன்றி இடங்களை பிடித்திருந்தனர். 39 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியாவின் சார்பாக ரிஷப் பந்த் 10வது இடத்தில் உள்ளார்
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.