செய்திகள்

தேர்வுக் குழுவினரிடம் எனக்கு பிரச்னை இருந்ததால் என்னை தேர்வு செய்யவில்லை: ராயுடு அதிரடி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராயுடு 2019 உலகக் கோப்பையில் தேர்வு செய்யாததிற்கு காரணம் கூறியுள்ளார். 

DIN

2013இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் அம்பத்தி ராயுடு. 55 போட்டிகளில் விளையாடிய அவர் 47 சராசரியுடன் விளையாடியுள்ளார். சுழல் பந்து, வேகப் பந்து என அனைத்தையும் அதிரடியாக ஆடும் திறமைசாலியான பேட்டர். 

2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வான ராயுடு, 16 ஆட்டங்களில் 802 ரன்கள் எடுத்து பிறகு இந்திய அணிக்கும் தேர்வானார். நூலிழையில் 2019 உலகக் கோப்பை அணியில் நெம்.4 இடத்திற்கு இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டார். அவரும் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த நேரத்தில் 3டி கண்ணாடி என ராயுடு கிண்டலாக பதிவிட்ட ட்வீட் வைரலாகியது. 

ஐபிஎல் 2022 ஏலத்தில் ராயுடுவை ரூ. 6.75 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே. இந்த வருட ஐபிஎல்-லில் 12 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 271 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 124.31. 

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது நேர்காணல் ஒன்றில் 2019 உலகக் கோப்பையில் தேர்வு செய்யாததிற்கு காரணம் கூறியுள்ளார். ராயுடு கூறியதாவது:

நான் எனது ஆரம்பகால கிரிக்கெட்டின்போது தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளேன். அப்போது அவர்களுக்கும் எனக்கு பிரச்னைகள் இருந்தது. இந்தக் காரணத்தால்கூட நான் 2019 அணியில் இல்லாமல் போயிருக்கலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT