படம்: ட்விட்டர் | பிளாக்கேப்ஸ் | மைக்கெல் பிரேஸ்வெல் 
செய்திகள்

ஒருநாள் உலகக் கோப்பை: மற்றுமொரு நியூசிலாந்து வீரர் விலகல்! 

பிரபல நியூசிலாந்து வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

DIN

பிரபல நியூசிலாந்து வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் போட்டியின்போது காயம் ஏற்பட்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாமல் இருக்கிறார். தற்போது இவரை தொடர்ந்து 32 வயதான மைக்கெல் பிரேஸ்வெல் நியூசிலாந்திற்கு நல்ல ஆல்ரவுண்டர் ஆவார். 

அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 510 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 42.50 ஆகும். 2 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். பந்து வீச்சில் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிகாக நன்றாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்டிங் ஆடும்போது பிரேஸ்வெல்லுக்கு வலது காலின் தசை நாரில் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. 6-8 மாதங்கள் ஓய்வு தேவைப்படுவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT