செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்கூப்பில் மீண்டும் சிக்ஸ்! (விடியோ) 

முதல் ஆஷஸ் டெஸ்டின் 4வது நாளில் இங்கிலாந்து அணி அதிரடியான  ஆட்டத்தை தொடங்கியுள்ளது. 

DIN

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்களும், ஆஸி. அணி 386/10 ரன்களும் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர் முடிவில் 82/3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

ஆரம்பம் முதலே ஜோ ரூட் அதிரடியாக விளையாடி வருகிறார். பொதுவாக டி20 போட்டிகளில் மட்டுமே ரிவர்ஸ் ஸ்கூப் விளையாடுவார்கள். ஆனால் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளிலே இதை பயன்படுத்தி வருகிறார். 4வது நாளின் முதல் பந்திலே ரிவர்ஸ் ஸ்கூப் விளையாடியது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸிலும் இவ்வாறு ஆடி ஒரு சிக்ஸ்ர் அடித்திருப்பார்.  

பின்னர் இரண்டாவது ஓவரில் மீண்டும்  ரிவர்ஸ் ஸ்கூப்பில் ஒரு பவுண்டரி ம்ற்றும் சிக்ஸர் அடித்து அசத்தி வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார் ஜோ ரூட்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலருஆர்வத்துடன் இந்த விடியோவினை பகிர்ந்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT