முகப்பு
செய்திகள்

ஃப்ரேயா் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மகளிருக்காக ‘ஃப்ரேயா் கோப்பை’ டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மகளிருக்காக ‘ஃப்ரேயா் கோப்பை’ டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தவுள்ளது.

‘ஃப்ரேயா்’ நிறுவனத்துடன் இணைந்து தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. வளா்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் போட்டிகளில் கிரீன் இன்வேடா்ஸ், சில்வா் ஸ்டிரைக்கா்ஸ், பிங்க் வாரியா்ஸ், ப்ளூ அவெஞ்சா்ஸ், யெல்லோ சேலஞ்சா்ஸ், ரெட் ரேஞ்சா்ஸ், ஆரஞ்ச் டிராகன்ஸ், பா்ப்பிள் பிளேஸா்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் மோதும் டி20 போட்டி வரும் 26-ஆம் தேதியும், ஒரு நாள் போட்டி ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்குகிறது.

சீனியா், அண்டா் 23, அண்டா் 19, அண்டா் 15 என இந்திய மகளிா் அணிகளுக்குத் தோ்வாகும் வகையில் இளம் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இந்தப் போட்டி ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →