செய்திகள்

புதிய கேப்டன்: தெ.ஆ. டி20 அணியிலிருந்து பவுமா நீக்கம்!

தென்னாப்பிரிக்காவின் டி20 அணியிலிருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்காவின் டி20 அணியிலிருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெ.ஆ. டி20 அணியின் புதிய கேப்டனாக மார்கரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தெ.ஆ. அணியின் கேப்டனாக இருந்த பவுமா தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டு பிளெஸ்சிஸை அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஒருநாள் தொடருக்கான தெ.ஆ. அணியின் கேப்டனாக பவுமா அறிவிக்கப்பட்டுள்ளார். தெ..ஆ. வெள்ளைப் பந்து அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராக டுமினி நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT