தோனி (கோப்புப் படம்) 
செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கிய தோனி: விடியோ

ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ள தோனியும் இதர சிஎஸ்கே வீரர்களும் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.

DIN

ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது. இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் சென்னையில் ஏப்ரல் 3, ஏப்ரல் 12, ஏப்ரல் 21, ஏப்ரல் 30, மே 6, மே 10, மே 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ள தோனியும் இதர சிஎஸ்கே வீரர்களும் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கான காணொளியை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

SCROLL FOR NEXT