செய்திகள்

அதீத நம்பிக்கையுடன் விளையாடுகிறோமா?: ரவி சாஸ்திரியின் விமர்சனத்துக்கு ரோஹித் சர்மா பதில்!

DIN


முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றதால் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுவது தவறு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.

3-வது டெஸ்டில் இந்திய அணி சிறிது அதீத நம்பிக்கையுடன் விளையாடியதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்திய அணி மீதான விமர்சனம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

நாங்கள் முதல் இரு டெஸ்டுகளில் வென்றபிறகு வெளியே உள்ளவர்கள் நாங்கள் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாக எண்ணி விடுகிறார்கள். இது முழுக்க அபத்தமானது. ஏனெனில் நாங்கள் நான்கு டெஸ்டுகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என எண்ணுகிறோம். இரு டெஸ்டுகளில் மட்டும் வெற்றி பெற எண்ணவில்லை. நாங்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளதாக மற்றவர்கள் எண்ணினால் எங்களுக்கு அதுகுறித்துக் கவலையில்லை. ஏனெனில் ரவி சாஸ்திரியும் எங்களுடன் ஓய்வறையில் இருந்துள்ளார். விளையாடும்போது நாங்கள் என்ன மனநிலையில் இருப்போம் என அவருக்குத் தெரியும். தீவிரமாகப் போராடுவதே முக்கியம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

தாடாளன் பெருமாள் கோயில் தங்க கருடசேவை

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

SCROLL FOR NEXT