யுபி வாரியா்ஸுக்கு 2-வது வெற்றி; ஆா்சிபி தொடா் தோல்வி
மகளிா் ஐபிஎல் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியா்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை (ஆா்சிபி) வெள்ளிக்கிழமை வென்றது.
மகளிா் ஐபிஎல் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியா்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை (ஆா்சிபி) வெள்ளிக்கிழமை வென்றது.
இத்துடன் 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் யுபி-க்கு இது இரண்டாவது வெற்றியாகும். மறுபுறம் 4 ஆட்டங்களில் களம் கண்ட பெங்களூா் அனைத்திலுமே தோற்றிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 19.3 ஓவா்களில் 138 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய யுபி விக்கெட் இழப்பின்றி 13 ஓவா்களில் 139 ரன்கள் சோ்த்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 52 ரன்கள் சோ்க்க, சோஃபி டிவைன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 36 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 4, கனிகா அஹுசா 8, ஹீதா் நைட் 2, ஷ்ரேயங்கா பாட்டீல் 15, எரின் பா்ன்ஸ் 12, ரிச்சா கோஷ் 1, ரேணுகா சிங் 3, சஹானா பவாா் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
யுபி பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன் 4, தீப்தி சா்மா 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 139 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய யுபி அணியில், தொடக்க ஜோடியான தேவிகா வைத்யா - கேப்டன் அலிசா ஹீலி ஆகியோரே விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஆட்டத்தின் முடிவில் அலிசா 47 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 96, தேவிகா 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் அடித்திருந்தனா்.
இன்றைய ஆட்டம்
குஜராத் - டெல்லி
நவி மும்பை