உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசிலாந்தின் கையில் இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு
உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நியூசிலாந்து கையில் உள்ளது.
உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நியூசிலாந்து கையில் உள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் இலங்கை அணி நிர்ணயித்த 285 ரன் நோக்கி நியூசிலாந்து விளையாடி வருகிறது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாலோ, டிரா செய்தாலோ இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
இதையும் படிக்க- நமது மகள்கள் முன்னேறும்போதுதான் ‘புதிய இந்தியா’ இலக்கை அடைய முடியும்: குடியரசுத் தலைவா்
அதேசமயம் ஆஸ்திரேலியா உடனான 4ஆவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலும் இந்திய அணி இறுதிக்கு தகுதி பெறும். 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து வெற்றிக்கு இன்னும் 257 ரன்கள் தேவைப்படுகிறது.
அதனால் இந்திய ரசிகர்கள் இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.