செய்திகள்

ஒருநாள் தொடர்: கம்மின்ஸ் விலகல், ஆஸி. அணிக்குப் புதிய கேப்டன் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17 முதல் தொடங்குகிறது. மார்ச் 22 அன்று சென்னையில் கடைசி ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டிருந்தார். பிறகு அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாடாமல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் கம்மின்ஸ். கடந்த வாரம் கம்மின்ஸின் தாய் மரியா காலமானார். இதையடுத்து ஒருநாள் தொடரில் இருந்தும் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

தற்போது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரு டெஸ்டுகளிலும் சிறப்பாகத் தலைமை தாங்கி அணியை வழிநடத்தினார் ஸ்மித். அதனால் இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்காக 51 ஒருநாள் ஆட்டங்களில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் ஆட்டங்களில் ஆரோன் ஃபிஞ்ச், கம்மின்ஸ், ஹேசில்வுட் என 3 கேப்டன்கள் பணியாற்றியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

SCROLL FOR NEXT