செய்திகள்

ஷமி அசத்தல் பந்து வீச்சு: குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு! 

டாஸ் வென்று பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் எடுத்தது. 

DIN


புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தில்லி அணியும் இன்று பலப்பரீட்சை செய்யவுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதல் ஓவரிலேயே தில்லி அணியை சேர்ந்த பிலிப் சால்ட் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

அடுத்தடுத்த வந்த தில்லி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிலைத்து ஆடிய அமன் ஹகிம் கான் அதிகபட்சமாக 51 ரன்களும், அக்‌ஷர் படேல் 27 ரன்களும், ரிபப் படேல் 23 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 130/8 ரன்கள் எடுத்தனர். வார்னர்- 2, பிரியம் கர்க்-10, ரோஸ்ஸோவ்- 8, மணீஷ் பாண்டே- 1, நோர்க்யா- 3. 

குஜராத் சார்பாக ஷமி சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்களுக்கு 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். மோஹித் சர்மா 2 விக்கெட்டுகலை எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT