செய்திகள்

சிஎஸ்கே அனைத்து வீரர்களையும் சமமாக நடத்தும்: ருதுராஜ் பேட்டி

அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் சிஎஸ்கே நிர்வாகம் சமமாக நடத்துமென ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 

DIN

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான தொடக்கம் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்தாண்டு அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 384 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.

போட்டி முடிந்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: 

அணியில்  உள்ள அனைத்து வீரர்களையும் சிஎஸ்கே நிர்வாகம் சமமாக நடத்தும். அவர்கள் பிளேயிங் லெவனில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும். போட்டி நடந்துக் கொண்டு இருக்கும்போது இந்த தருணத்தில் நீயாக இருந்தால் என்ன் செய்வாய் எனக் கேட்பார்கள். இது அணியில் மிகப் பெரிய பாசிடிவிட்டியாகவும் வலுவான அணியாகவும் செயல்பட உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனுஷி படம் பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! சில காட்சிகளை நீக்க உத்தரவு!

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

SCROLL FOR NEXT