செய்திகள்

வருண் சக்ரவர்த்தி அசத்தல் பந்து வீச்சு: கேகேஆர் அணிக்கு 180 ரன்கள் இலக்கு! 

டாஸ் வென்று பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்ததுள்ளது. 

DIN

ஐபிஎல்-இன் 53வது போட்டியாக புள்ளிப் பட்டியலில் 7,8வது முறையே இருக்கும் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை செய்கிறது. 

டாஸ் வென்று பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் நிலைத்து ஆடி 57 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 8 பந்துகளில் 21 ரன்களும், ஹர்ப்ரீட் பார் 9 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான ஸ்கோரை சேர்த்தனர். 

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 179/7 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி சார்பாக வருண் சக்ரவர்த்தி  3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஷர்சித் ராணா 2 விக்கெட்டுகளும் எடுத்தார். 

இந்தப் போட்டியில் பஞ்சாப் வென்றால் 3வது இடத்துக்கு முன்னேறும். கேகேஆர் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு போக வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT