கோப்புப் படம் 
செய்திகள்

3வது இடத்தை பிடிக்கப்போவது யார்?: மும்பை பந்து வீச்சு! 

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

DIN

ஐபிஎல் லீக் சுற்றின் 54வது போட்டியில் ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும் 8வது இடத்திலிருக்கும் மும்பை அணியும் தலா 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்தப் போட்டியில் யார் வென்றாலும் 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு செல்வது உறுதியாகிவிடும். 

நேற்று வலைப்பயிற்சியின்போது சச்சின், விராட் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் 175 சதங்கள் ஒரே இடத்தில் உள்ளதெனவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

ஆர்சிபி-மும்பை இரு அணிகளும் 31 போட்டிகளில் விளையாடி மும்பை 17 போட்டிகளிலும் ஆர்சிபி 14 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மும்பை அணியில் மாற்றங்கள்: ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆர்சிபி அணியில் மாற்றங்கள்: கரண் சர்மாவுக்கு பதிலாக வைஷக் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 திருட்டு

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு குடை

கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT