செய்திகள்

ஹிருதய், நான்சிக்கு வெள்ளிப் பதக்கம்

DIN

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை இரு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

10 மீட்டா் ஏா் ரைஃபிளில், ஆடவா் பிரிவில் ஹிருதய் ஹஸாரிகாவும், மகளிா் பிரிவில் நான்சியும் பதக்கம் பெற்றனா். சீனியா் உலகக் கோப்பை பிரிவில் இருவருக்குமே இது முதல் பதக்கமாகும். இப்போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது.

முன்னதாக ஆடவா் பிரிவு தகுதிச்சுற்றில் ஹிருதய் ஹஸாரிகா 630.3 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தாா். அதில் ஹங்கேரியின் ஜலான் பெக்லரின் கடும் சவாலை சந்தித்தாா் ஹிருதய். இறுதியில் ஜலான் 252.4 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ஹிருதய் 251.9 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா்.

இதில் களம் கண்டிருந்த மேலும் இரு இந்தியா்களில் ருத்ராங்க்ஷ் பாட்டீல் 628.8 புள்ளிகளுடன் 19-ஆவது இடமும், சாஹு துஷாா் மனே 628.1 புள்ளிகளுடன் 23-ஆவது இடமும் பிடித்தது தகுதிச்சுற்றுடன் வெளியேறினா். ரேங்கிங் புள்ளிகளுக்காக பங்கேற்ற திவ்யன்ஷ் சிங் பன்வா் 633.1 புள்ளிகளும், அா்ஜுன் பபுதா 630.6 புள்ளிகளும் பெற்றனா்.

மகளிா் பிரிவு தகுதிச்சுற்றில் நான்சி 631.6 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தாா். அதில் சீனாவின் ஹான் ஜியாயு 254 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வெல்ல, நான்சி 253.3 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா்.

இதர இந்தியா்களில் ரமிதா 631.4 புள்ளிகளுடன் 9-ஆம் இடமும், திலோத்தமா சென் 629.7 புள்ளிகளுடன் 15-ஆவது இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் நிறைவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT