செய்திகள்

உலகத்திலேயே சிலரால் மட்டும்தான் இந்த ஷாட்டை விளையாட முடியும்: சூர்யகுமாருக்கு சச்சின் புகழாரம்! 

மும்பை இந்தியன்ஸை சேர்ந்த பேட்டர் சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தினை பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். 

DIN

முதலில் மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் சோ்த்தது. அடுத்து குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களே எட்டியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை வீரா் சூா்யகுமாா் யாதவ், ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா். 49 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20யில் 3 சதத்தினை அடித்திருந்தாலும் இதுதான் ஐபிஎல்லில் முதல் சதம். 

இந்த ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் சச்சின் கூறியதாவது: 

சூர்யகுமார் யாதவ் இந்த மாலை நேரத்தினை ஒளியூட்டியிருக்கிறார். இந்த ஆட்டம் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் முஹமது ஷமி ஓவரில் தேர்ட்-மேன் இடத்தில் அடித்த சிக்ஸ் அபாரமானது. பந்திற்கு ஏற்றார்போல பேட்டிற்கு தேவையான கோணம் அமைய இடம்கொடுத்து பந்தீனை சீவி விடுவார். இது மிகவும் கடினமான ஷாட். உலகத்திலேயே சிலரால் மட்டும்தான் இந்தமாதிரி ஷாட்டுகளை அடிக்க முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT