செய்திகள்

கம்பீரை நோக்கி கோலி கோலி என கோஷமிட்ட ஹைதராபாத் ரசிகர்கள்: வைரல் விடியோ! 

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் ரசிகர்கள் கோலி கோலி என கோஷமிட்டனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

மே 1ஆம் தேதி நடந்த போட்டியின் இரண்டாவது பாதியின் போது கோலி மற்றும் ஆப்கனை சேர்ந்த லக்னெள வீரர் நவீன்-உல்-ஹக் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்து வீரர்கள் கை குலுக்கும் போது மீண்டும் கோலி - நவீன் இடையே மோதல் ஏற்பட, லக்னெள ஆலோசகர் கம்பீர் குறுக்கிட்டார். தொடர்ந்து, கம்பீரும் கோலியும் மோதிக் கொண்ட நிலையில் சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். 

கோலி-கம்பீர்-நவீன் இடையேயான பனிப்போர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வரும் நிலையில் நேற்றைய ஹைதராபாத் - லக்னௌ அணிகளுக்கு இடையேயான போட்டியில் 19வது ஓவரில் நோ பால் தொடர்பாக நடுவர்கள் தீர்ப்பு சர்ச்சையானதை தொடர்ந்து கம்பீரை நோக்கி ஹைதராபாத் ரசிகர்கள் கோலி கோலி என கோஷமிட்டனர். 

ஏற்கனவே பழைய போட்டியின்போது கம்பீரை நோக்கி கோலி என ஒரு ரசிகர் அழைக்க, கம்பீர் முறைத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT