செய்திகள்

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான்: தோனி உருக்கம்!

அகமதாபாத்தில் பெய்த மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

DIN

அகமதாபாத்தில் பெய்த மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெறவிருந்த இப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

அதனையடுத்தி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையினா போட்டி டாஸ் போடப்பட்டது. 

இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய தோனி, நேற்று உடைமாற்றும் அறையில் இருந்தோம். ஒரு கிரிக்கெட் வீரன் திடலில் இறங்கி விளையாடவே விரும்புவான். ஆனால் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான். அவர்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT