செய்திகள்

காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

DIN

13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இத்தொடரில் இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை.

இத்தொடரில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதன்பின் நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இருந்து, காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

குஜராத்தில் கோல்ஃப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேக்ஸ்வெல் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

அரையிறுதியை நெருங்கும் நேரத்தில், இங்கிலாந்துடனான முக்கிய போட்டியில் மேக்ஸ்வெல் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT