செய்திகள்

புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்! 

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

உலகக் கோப்பை லீக் போட்டியின் 35வது ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூ. மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. 

உஸாமா மிர்-க்கு பதிலாக இந்தப் போட்டியில் ஹசன் அலி களமிறங்கினார். நியூசிலாந்தின் தொடக்க வீரர் கான்வேயின் விக்கெட்டினை 10.5வது ஓவரில் எடுத்தார் ஹசன் அலி. இந்த விக்கெட்டின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

2016இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹசன் அலி 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  போட்டியில் 13 விக்கெட்டுகளை எடுத்து அந்தத் தொடரிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலர் ஆனார் ஹசன் அலி. 

66 போட்டிகளில் 38 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்த ஹசன் அலி இந்த உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாக இருந்தது. நஷீம் ஷா காயம் காரணமாக வெளியேற திடீரென அணியில் இடம்பிடித்தார் ஹசன் அலி. 

6வது பாகிஸ்தான் வீரர் 

வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தினை பிடித்துள்ளார் ஹசன் அலி. ஷாஹீன் அப்ரிடி (51), முஷ்டக் (53), வாக்கர் யூனிஸ் (59), சொயிப் அக்தர் (60), நவித் உல் ஹசன் (65) வரிசையில் 6வது இடம் பிடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT