செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது இடத்தில் முகமது ஷமியின் சாதனை; முதலிடத்தில் யார்?

DIN

ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் 2-வது முறையாக தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையான போட்டி நேற்று முன் தினம் (நவம்பர் 2) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இந்தப் போட்டிக்குப் பிறகு முகமது ஷமி ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை (3 முறை) 5 விக்கெட்டுகள் எடுத்த ஜவஹல் ஸ்ரீநாத் மற்றும் ஹர்பஜன் சிங்கின் சாதனையை அவர் முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் 4 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதுமட்டுமல்லாது, உலகக் கோப்பையில் அதிகமுறை (3 முறை) 5 விக்கெட்டுகள்  எடுத்துள்ள ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிகமுறை 4 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலிலும் முகமது ஷமி இடம்பிடித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை (3 முறை)  மற்றும் நடப்பு உலகக் கோப்பையில் (3 முறை) முகமது ஷமி அதிக முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இரண்டாவது வீரர்

ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் 2-வது முறையாக தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையையும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பெற்றார்.

அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் (4/40, 4/16, 5/69) 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இந்த ஆண்டு உலகக் கோப்பையிலும் அவர் (5/18, 4/22, 5/54) தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதுபோன்று ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் இரண்டாவது முறையாக 4 விக்கெட்டுகளை எடுக்கும் இரண்டாவது வீரர் முகமது ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வீரர் யார்? 

இந்த சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாகர் யூனிஸ் மூன்று முறை நிகழ்த்தி இந்த சாதனைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

அவர் கடந்த 1990 ஆம் ஆண்டு இரண்டு முறையும், 1994 ஆம் ஆண்டு ஒரு முறையும் என மொத்தமாக 3 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT