உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்துள்ளது.
உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு நம்பிக்கையளித்தது: ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 400 ரன்களைக் கடந்ததன் மூலம் உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்துள்ளது.
உலகக் கோப்பையில் 400 ரன்களைக் கடந்த அணிகள்
தென்னாப்பிரிக்கா - 3 முறை
இந்தியா - 1 முறை
ஆஸ்திரேலியா - 1 முறை
நியூசிலாந்து - 1 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.