செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள்!

ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி சமன் செய்தார்.

DIN

ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி சமன் செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி இந்த சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிறந்த நாளில் விளாசியுள்ள இந்த சதம் அவருக்கு மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. 

இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை  விராட் கோலி சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்

விராட் கோலி - 49 சதங்கள் (277 போட்டிகளில்)
சச்சின் டெண்டுல்கர் - 49 சதங்கள் (452 போட்டிகளில்)
ரோஹித் சர்மா - 31 சதங்கள் (251 போட்டிகளில்)
ரிக்கி பாண்டிங் - 30 சதங்கள் (365 போட்டிகளில்)
சனத் ஜெயசூர்யா - 28  சதங்கள் (433 போட்டிகளில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

SCROLL FOR NEXT