செய்திகள்

விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; பிறந்த நாளில் புகழாரம் சூட்டிய ராகுல் டிராவிட்!

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

DIN

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட்  கோலி அவரது 35-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர்.  அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஒருநாள் போட்டிகளில் அவர் ஆட்டத்தை எடுத்துச் செல்லும் விதம் மற்றும் ஆட்டத்தினை முடிக்கும் விதம் தனித்துவமானது. அவரது சாதனைகள் அவர் தலைமுறை வீரர்களுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துசக்தியாக இருக்கும் என்றார். 

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி நடப்பு உலகக் கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT