கோப்புப் படம் 
செய்திகள்

ஸ்மித்துக்கு வெர்டிகோ தலைசுற்றல்: நாளைய போட்டியில் பங்கேற்பாரா? 

பிரபல ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் நாளைய போட்டியில் பங்கேற்பாரா  என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

DIN

உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமான செய்தி வந்துள்ளது. 

திடீரென காரணமே இல்லாமல் சிலருக்கு அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மற்றும் பொருட்கள் சுற்றுவது போல இருக்கும். இதற்கு வெர்டிகோ என்று பெயர். ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்தப் பிரச்னை உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பயிற்சியில் ஈடுப்பட்டபோது அவருக்கு மயக்கம் வந்துள்ளது. 

இது குறித்து ஓய்வறையில் இருந்து ஸ்மித், “கடைசி நாளில் இருந்து எனக்கு சில நேரங்களில் வெர்டிகோ பிரச்னை ஏற்பட்டது. இது சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் சரியாகுமென நம்புகிறேன். ஆனால் இங்கிருப்பது சரியான இடமாக தோன்றவில்லை. நான் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் சிறப்பாக இருப்பதாக உணரவில்லை. இங்கிருப்பது விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நிச்சயமாக பயிற்சியில் எடுபடுவேன்” எனக் கூறியுள்ளார். 

ஏற்கனவே மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் இல்லாத நிலையில் ஸ்மித்தும் இல்லையென்றால் வெற்றி பெறுவது மிகவும் கடினம்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டி என்பதால் ஸ்டீவ் ஸ்மித் நிச்சயமாக விளையாட வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT