செய்திகள்

கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் விலகல்!

அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.  

DIN


பாகிஸ்தான் அணியின் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். 

உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இதன்காரணமாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டெஸ்ட், டி-20 ஆகிய 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும்  கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக பாபர் அசாம்  அறிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள பாபர் அசாம், இது மிகவும் கடினமான சூழல். ஆனால், வேறொருவர் பொறுப்பேற்பதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வீரராக பங்கேற்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT