செய்திகள்

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் கலையை இவரிடம் கற்றுக் கொள்கிறேன்: திலக் வர்மா

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் கலையை ரிங்கு சிங்கிடமிருந்து கற்றுக்கொள்வதாக இந்திய அணியின் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

DIN

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் கலையை ரிங்கு சிங்கிடமிருந்து கற்றுக்கொள்வதாக இந்திய அணியின் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த ரிங்கு சிங் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட 5 சிக்ஸர்களை விளாசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார் ரிங்கு சிங். போட்டியை  வெற்றிகரமாக முடித்துத் தரும் அவரது இந்த திறமையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் வெளிக்காட்டினார். 

இந்த நிலையில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் கலையை ரிங்கு சிங்கிடமிருந்து கற்றுக்கொள்வதாக இந்திய அணியின் திலக் வர்மா  தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் ரிங்கு சிங்கிடமிருந்து போட்டியை எவ்வாறு வெற்றிகரமாக முடிப்பதை என்பதை கற்றுக்கொண்டு வருகிறேன். இந்திய அணிக்காக வெற்றிகரமாக போட்டியை முடித்துக் கொடுக்க நானும் விரும்புகிறேன். அடுத்து வரும் போட்டிகளில் அதனை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 

இந்திய அணிக்காக இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 2 அரைசதங்கள் எடுத்து 140-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT