இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று குவாஹாட்டியில் 3-வது டி20 போட்டி நடைபெறுகிறது.
இதையும் படிக்க: விராட் கோலி ஆட்டமிழந்தபோது நூலகமாக மாறிய மைதானம்: பாட் கம்மின்ஸ்
இரு அணிகளுக்கும் இடையிலான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஸாம்பா இடம்பெறவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரையில் முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை இழக்காமலிருக்க வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.