செய்திகள்

ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் பதக்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. அதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.45 விநாடிகளில் இலக்கை எட்டி பஹ்ரைன் வீராங்கனை முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், 55.01 விநாடிகளில் இலக்கை எட்டி சீன வீராங்கனை இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் நான்காவது இடத்தில் இருந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சிறப்பாக செயல்பட்டு மூன்றாமிடத்துக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை வென்றார். தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ் கோவையைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 3 படங்கள்!

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை! உறவினர்கள் மறியல்!

தூத்துக்குடி நகைக் கடையில் திருட்டு! மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது!

SCROLL FOR NEXT