செய்திகள்

10வது பயிற்சி ஆட்டம்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு! 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் 10ஆவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. அணி பேட்டிங் செய்து வருகிறது. 

DIN

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடபெற்று வருகின்றன. ஆஸி. அணி தனது பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது. அந்தப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிற ஆஸி. அணி 20 ஓவர் முடிவில் 127/2 ரன்கள் எடுத்துள்ளது. 

வார்னர்-48 ரன்கள், மிட்செல் மார்ஷ்-31 ரன்களுக்கு ஆட்டமிழக்க தற்போது ஸ்மித் 19 ரன்களுடனும், லபுஷேன் 23 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தானின் உஸாமா மிர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

பாகிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டிதான் பயிற்சி ஆட்டங்களில் கடைசி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா  நெதர்லாந்து அணிகளின் போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்தது - சுமார் 50% வாக்குகள் பதிவு!

பொங்கல் விடுமுறையில் மெரீனாவில் அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து நெரிசல்!

ஆளுங்கட்சியின் ஆயுதமாக தணிக்கை வாரியம்: கனிமொழி எம்.பி.

யு-19 உலகக் கோப்பை - இந்தியா அபார வெற்றி!

இந்திய கடல் எல்லையில் பாக். மீனவர்கள் 9 பேர் கைது

SCROLL FOR NEXT