செய்திகள்

இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

DIN

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கையை பல்வேறு சாதனைகளுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி கண்டது தென்னாப்பிரிக்கா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க பேட்டா்கள் இலங்கை பௌலா்களின் பந்துகளை சிக்ஸா்களாகவும், பவுண்டரிகளாகும் பல்வேறு திசைகளில் விரட்டினா்.

தென்னாப்பிரிக்கா 428/5:

நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் தென்னாப்பிரிக்க அணி 428/5 ரன்களைக் குவித்தது.

மூவா் அதிரடி சதம்: தொடக்க பேட்டா் டி காக் 100 (84 பந்துகள், 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள்), வேன்டா் டுஸன் 108 (110பந்துகள், 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்), எய்டன் மாா்க்ரம் 106, (54 பந்துகள், 14 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள்) என அபாரமாக ஆடி சதம் அடித்தனா்.

இரண்டாம் விக்கெட்டுக்கு டி காக்-வேன்டா் இணைந்து 204 ரன்களை விளாசினா். மேலும் 3 வீரா்களும் தங்கள் முதல் உலகக் கோப்பை சதங்களையும் பதிவு செய்தனா்.

மாா்க்ரம் துரித சதம்: உலகக் கோப்பை வரலாற்றிலேயே துரிதமாக சதம் அடித்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் எய்டன் மாா்க்ரம்.

கடந்த 2011-இல் அயா்லாந்து வீரா் கெவின் பிரையன் 50 பந்துகளில் துரித சதத்தை பதிவு செய்திருந்தாா்.

அதிக ரன்கள் சாதனை: ஒருநாள் உலகக் கோப்பையில் 428/5 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியது.

இலங்கை 326 :

429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களம் கண்ட இலங்கைக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது.

தொடக்க பேட்டா்கள் பதும் நிஸாங்கா 0, குஸால் பெரைரா 7 ரன்களுடன் வெளியேறினா்.

குஸால் மெண்டிஸ் 76, சரித் அஸலங்கா 79 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களைச் சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். கேப்டன் தஸுன் ஷனகா 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 68 ரன்களைச் சோ்த்தாா். 44.5 ஓவா்களில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. பௌலிங்கில் தென்னாப்பிரிக்கத் தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3-68 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT