செய்திகள்

ஜெயசூர்யா சாதனையை முறியடித்த மெண்டிஸ்! 

ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை அணி வீரர் குசால் மெண்டிஸ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். 

DIN

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கையை பல்வேறு சாதனைகளுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி கண்டது தென்னாப்பிரிக்கா. 

நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் தென்னாப்பிரிக்க அணி 428/5 ரன்களைக் குவித்தது. 44.5 ஓவா்களில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. குசால் மெண்டிஸ் 76, சரித் அஸலங்கா 79, ஷனகா 68 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களைச் சோ்த்தனா். 

இதில் அற்புதமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். இலங்கை அணியில் ஒருநாள் உலகக் கோப்பையில் ஒருப் போட்டியில் மட்டும் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் குசால் மெண்டிஸ். 

இதற்கு முன்பாக 2007-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா 7 சிக்ஸ்ர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT