செய்திகள்

இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியில் ஷுப்மன் கில் இல்லை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி தில்லி சென்றடைந்தது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி தில்லி சென்றடைந்தது.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி. இந்த நிலையில்  நாளை மறுநாள் (அக்டோபர் 11) தனது அடுத்தப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி தில்லி சென்றடைந்ததாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணி தில்லியில் உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் இந்திய அணியினருடன் செல்லவில்லை. அவர் காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலையை பிசிசிஐ-ன் மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில் ஆப்கானிஸ்தானுடனான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT