செய்திகள்

123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்!

DIN

123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்சில் வருகிற 2028  ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒலிம்பிக் குழுவிடம் அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்  ஏற்பாட்டாளர்கள்  முன்வைத்தனர். 

இந்த நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கிரிக்கெட்டைத் தவிர்த்து பேஸ்பால் உள்ளிட்ட மேலும் நான்கு புதிய போட்டிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், எத்தனை அணிகள் பங்கேற்கும் மற்றும் பங்கேற்கும்  அணிகளுக்கான தகுதி என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கிரிக்கெட் முதலும், கடைசியுமாக கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில்  இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT