முகப்பு
செய்திகள்

டாப் ஆர்டர் பொறுப்புடன் விளையாட வேண்டும்: வங்கதேச துணைக் கேப்டன்

வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:

வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும், குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகுந்த பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும் அந்த அணியின் துணைக் கேப்டன் நஜ்முல் ஹொசைன் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம்  ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் பெரிய அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவிக்கத் தவறுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எளிய இலக்கை வங்கதேசம் துரத்திப் பிடித்து வெற்றி பெற்றது. அதன்பின், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 137  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நேற்று விளையாடிய மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும், குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகுந்த பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும் அந்த அணியின் துணைக் கேப்டன் நஜ்முல் ஹொசைன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை  திட்டமிட்டே களமிறங்குகிறோம். ஆனால், நாங்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு  எப்போதும் சவால் இருக்கும். அவர்கள் புது பந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்களது தோல்வியிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவோம். எங்களது பந்துவீச்சாளர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் நாங்கள் அதிக அளவில் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →