செய்திகள்

அதிக தோல்விகள்: ஜிம்பாப்வே சாதனையை சமன்செய்த இலங்கை!

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணிகள் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சாதனையை இலங்கை சமன் செய்தது.

DIN

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணிகள் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சாதனையை இலங்கை சமன் செய்தது.

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், லக்னெளவில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியா அணியும் திங்கள்கிழமை மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

தொடர்ந்து, மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இதன்மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 42 முறை தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 தோல்விகளுடன் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

SCROLL FOR NEXT