மும்பை இந்தியன்ஸ் அணியினர் 
செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இலங்கை வீரர் நியமனம்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகியதை தொடர்ந்து தற்போது இலங்கை வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று (அக்டோபர் 20) நியமிக்கப்பட்டுள்ளார்.

லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் 2008-2017 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி உள்ளார். 

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகியதைத் தொடர்ந்து மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. 43 வயதாகும் லசித் மலிங்கா இதுவரை 83 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

மொத்தமாக, 289 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 390 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT