இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) காலமானார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) காலமானார்.
1946 ஆம் ஆண்டு அமிர்சரஸில் பிறந்த பிஷன் சிங் பேடி இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 14 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு பத்து விக்கெட்டுகள் அடங்கும். அதேபோல இந்திய அணிக்காக 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கடந்த 1970-ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியது.
இதையும் படிக்க: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் அவனி!
Advertisement
தனது மனைவி அஞ்சு மற்றும் மகன் அங்காத், மகள் நேஹாவுடன் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது.