செய்திகள்

இந்த உலகக் கோப்பைத் தொடரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்: ஆப்கானிஸ்தான் வீரர்

இந்த உலகக்  கோப்பையை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

DIN

இந்த உலகக்  கோப்பையை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. நேற்றையப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை வசமாக்கியது. 

இந்த நிலையில், இந்த உலகக்  கோப்பையை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைக்குப்  பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதுவே என்னுடைய இறுதி முடிவு. இந்த உலகக் கோப்பையை எனது வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்திருப்பேன். ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை எங்களது நாட்டு மக்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். ஆப்கானிஸ்தானின் நிலை எங்கள் அனைவருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் இல்லையென்றால் பெரிதாக மகிழ்ச்சி என்ற ஒன்றே இருக்காது. எங்களால் முடிந்தது இந்த வெற்றியின் மூலம் எங்கள் நாட்டு மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுக்கிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி என்றார்.

24 வயதாகும் நவீன் உல் ஹக் இந்த உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT