இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்றையப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஜிதா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். பெரேரா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழக்க பதும் நிசங்கா மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பதும் நிசங்கா 77 ரன்களுடனும் (7 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள்), சதீரா சமரவிக்கிரம 65 ரன்களுடனும் (7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) களத்தில் இருந்தனர்.
இதன்மூலம், 25.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைக்குப் பிறகு பாபர் அசாம் கேப்டன் பதவியில் தொடர்வாரா? : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு கிடைக்கும் 2-வது வெற்றி இதுவாகும்.