உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 26-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது அந்த அணி. மறுபுறம் பாகிஸ்தான், அரையிறுதி வாய்ப்பை இழக்கும் விளிம்பு நிலையில் இருக்கிறது. இனி தனது எஞ்சியுள்ள ஆட்டங்களில் அந்த அணி வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை தீா்மானிக்கும்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தானில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் அடிக்க, கேப்டன் பாபா் ஆஸம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50, ஷாதாப் கான் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினா்.
எஞ்சிய பேட்டா்களில் முகமது ரிஸ்வான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, முகமது நவாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 24, இஃப்திகா் அகமது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்கள் சோ்த்தனா். அப்துல்லா ஷஃபிக் 9, இமாம் உல் ஹக் 12, ஷாஹீன் அஃப்ரிதி 2, முகமது வாசிம் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தென்னாப்பிரிக்க பௌலிங்கில் தப்ரைஸ் ஷம்சி 4, மாா்கோ யான்சென் 3, ஜெரால்டு கோட்ஸீ 2, லுங்கி கிடி 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 271 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்காவில் எய்டன் மாா்க்ரம் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 91 ரன்கள் சோ்த்து அடித்தளம் அமைத்தாா். டேவிட் மில்லா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 29, டெம்பா பவுமா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, குவின்டன் டி காக் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சோ்த்தனா்.
ராஸி வான் டொ் 21, ஹென்ரிச் கிளாசென் 12, மாா்கோ யான்சென் 20, ஜெரால்டு கோட்ஸீ 10, லுங்கி கிடி 4 என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்ததால் கடைசி நேரத்தில் தடுமாற்றம் கண்டது தென்னாப்பிரிக்கா. முடிவில் கேசவ் மஹராஜ் 7, டப்ரைஸ் ஷம்சி 4 ரன்களுடன் அணியை ‘த்ரில்’ வெற்றிக்கு வழி நடத்தினா்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி 3, ஹாரிஸ் ரௌஃப், முகமது வாசிம், உசாமா மிா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.