செய்திகள்

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம்: நீரஜ் சோப்ரா

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புவதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

DIN

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புவதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்தப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புவதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்கள் மீது நான் அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்திய மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை நாம் வெல்ல வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT