ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 11 பேர் கொண்ட பிளேயிங் லெவன் அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியுள்ளது. இத்தொடரில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி நேபாளத்தையும், இலங்கை அணி வங்கதேசத்தையும் வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தன.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நாளை இலங்கையில் நடைபெற உள்ளது. குறிப்பாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது, மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 11 பேர் கொண்ட பிளேயிங் லெவன் அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான்(துணை கேப்டன்), ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, இஃப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், முகமது நவாஸ், நசிம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.