படம்: ட்விட்டர் 
செய்திகள்

சென்னை 28 படத்தினைப் போல ஆட்டமிழந்த ரோஹித்: முன்னாள் வீரர் பகிர்ந்த புகைப்படம்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் வீரர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN


நேற்றைய ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியினர் 48.5 ஓவர்களுக்கு 266 ரன்கள் எடுத்தது. மழையினால் ஆட்டம் தொடராமல் கைவிடப்படது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. 

இதில் ரோஹித் சர்மா ஷாஹீன் ஷா அப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே பல முறை இப்படி இடது கை பந்து வீச்சாளர்களிடம் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தாலும் இந்த முறை ஆட்டமிழந்த விதம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

சென்னை 28 படத்தில் நடிகர் சிவா கடற்கரை மணலில் சிறுவர்களிடம் ஆட்டமிழக்கும் விதத்தினைப் போலவே ரோஹித் சர்மா ஆட்டமிழந்துள்ளதாக மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா

ஏற்கனவே நடிகர் சிவாவைப் போலவே ரோஹித்தும் இருப்பதாக மீம்ஸ்கள் பரவியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகர் சிவாவும் ஒருமுறை, “அவர் என்னைப் போல நடிக்க முடியாது. நான் அவரைப்போல பேட்டிங் ஆட முடியாதென” ஜாலியாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சிவா 

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும் சிஎஸ்கே வீரருமான பத்ரிநாத் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் சிவாவும் ரோஹித்தின் புகைப்படத்தினையும் பகிர்ந்து அதே மாதிரி உள்ளதாக பகிர்ந்துள்ளார். 

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT