படம் | ட்விட்டர் 
செய்திகள்

சூப்பர் 4: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்- பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 11 பேர் கொண்ட பிளேயிங் லெவன் அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

DIN

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 11 பேர் கொண்ட பிளேயிங் லெவன் அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை இலங்கையில் நடைபெற உள்ளது.

முன்னதாக லீக் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் மழை காரணத்தால் முடிவு கிடைக்காமல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் இலங்கையில் நாளை நடைபெறும் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 11 பேர் கொண்ட பிளேயிங் லெவன் அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, இஃப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், பஹீம் அஷ்ரப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT