செய்திகள்

ரோஹித் சர்மா தவறவிட்ட சாதனை! 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடக்கும் முன்னமே ஆட்டமிழந்தார். 

DIN

247 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 240 இன்னிங்ஸில் 30 சதங்கள் 50 அரைசதங்களுடன் 9,978 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 22 ரன்கள் எடுத்திருந்தால் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார். 

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் அடித்தவரும் ரோஹித் சர்மாதான் (264) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 முறை 200+ அடித்து சாதனை புரிந்துள்ளார். 

ரோஹித் இன்னும் 22 ரன்கள் அடித்திருந்தால் 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 6வது நபராகவும் உலக அளவில் 15வது நபராகவும் இருந்திருப்பார். 

இந்திய  அணி 18 ஓவர்களுக்கு 124/2 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கோலி, ராகுல் இருக்கிறார்கள். ரோஹித் 56 ரன்களுக்கும் கில் 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

இந்தியாவில் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. சச்சின் டெண்டுல்கர் - 18,426
  2. விராட் கோலி   - 12, 903 
  3. சௌரவ் கங்குலி -11, 221
  4. ராகுல் திராவிட் - 10,768
  5. எம்.எஸ்.தோனி -10, 599 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT