முகப்பு
செய்திகள்

கும்ப்ளே சாதனையை முறியடித்த குல்தீப்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார்.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில், 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக பாகிஸ்தானுடனான போட்டியிலும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

இதன்மூலம் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்(88 போட்டிகள்) கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக 106 போட்டிகளில் விளையாடிய கும்ப்ளே 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அதேபோல், சர்வதேச அளவில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் 4-வது இடத்தை குல்தீப் யாதவ் பிடுத்துள்ளார்.

ஷக்லைன் முஷ்டாக் (78 போட்டிகள்), ரஷித் கான் (80 போட்டிகள்) மற்றும் அஜந்தா மெண்டிஸ் (84 போட்டிகள்) முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

மேலும், அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் ஷமி(80 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →